Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் லயோலா காலேஜ்ல படிச்சவன்…! அப்படி பேசுனா காலேஜை புடுங்கிடுவோம்… பாஜக மேடையில் எச்சரிக்கை…!!

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, ஜெகத் கஸ்பர் என்று ஒருவர் இருக்கிறார், பாதிரியார் என்று சொல்கிறார்கள். நான் கிறிஸ்துவ நிறுவனத்தில் படித்தவன் கிறிஸ்தவர்களை திட்டுவதற்காக வரவில்லை. முஸ்லிம் நிறுவனத்தில் படித்தவன், முஸ்லிம்ஸ்களை திட்டுவதற்காக வரவில்லை. இந்திய முஸ்லிமாக இருந்தால் பிஜேபி உன்னை காப்பாற்றும், இந்திய கிறிஸ்துவனாக இருந்தால் உன்னை பிஜேபி காப்பாற்றும்.

ஜெகத் கஸ்பர் சொல்கிறார் பேசும்போது, 40 சதவீதம் நீங்கள் இருந்தீர்கள் என்றால் முஸ்லிம் தோழர்களே நீங்கள் இந்த நாடு உங்களது என்று கேட்கலாம் என சொல்லுகிறார். நீ கிறிஸ்தவன்,  நாங்கள் 40% இருக்கும் இடத்தை கிறிஸ்தவர்களுக்கு தாருங்கள் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நீங்கள் ஏன் அடுத்தவன் இலையில் சாப்பாடு இல்லை, அடுத்தவன் இலையில் அது இல்லை, அடுத்தவன் இலையில் இனிப்பு இல்லை என்று நீ ஏன் சொல்கிறீர்கள்.

அவர் கிறிஸ்துவராக இருந்து கொண்டு சொல்கிறார்…. முஸ்லிம் மக்களே என்று…. ஏன் முஸ்லிம் மக்களே…. அதற்கு கிறிஸ்துவ மக்களே என்று சொல்லுங்கள்… அப்படி சொன்னால் முதலில் லயோலா காலேஜ்ஜை புடிங்கி விடுவோம். நானும் லயோலா காலேஜ்ல படிச்சவன் தான்.

Roman Catholic அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், Protestant என்று இருப்பார்களே அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். church of south india கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இந்த pentecostal இருப்பார்கள் பாருங்க…  அய்யோ… அதில் எஸ்.ஆர் சற்குணம் என்பவர் கலைஞருக்கு  நெருக்கம், எனக்கு தெரியும்; நான் அங்கு இருந்தேன். அவருக்கு பைபிளே திறந்து படிக்கவே தெரியாது, எனக்கு தெரிந்த அளவு கூட தெரியாது என விமர்சித்தார்.

Categories

Tech |