Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் லவ் தான் பண்றேன்” ஆனா மகாலட்சுமி….. இன்ஸ்டாவை தெறிக்க விடும் காதல் ஜோடி…. செம வைரல்….!!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமியின் இன்ஸ்டா  பதிவு வைரலாகி வருகிறது.

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமணம் தான் கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பலர் கூறிவரும் நிலையில் 2 பேருமே அதை மறுத்துள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தங்களுடைய ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CiEszesLDh2/?utm_source=ig_embed&utm_campaign=loading

இந்நிலையில் நடிகை மகாலட்சுமி தன்னுடைய போட்டோவை இன்ஸ்டால் பகிர்ந்து அதில் காதல் சொட்ட சொட்ட என பதிவு செய்துள்ளார். அதோடு காதல் பெர்பெக்ட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையாக இருந்தால் மட்டும் போதுமானது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரவீந்தர் நான் மகாலட்சுமியை காதலிக்கிறேன். உண்மையான காதல் என்னவென்றால், மகாலட்சுமி என்னை பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு மகிழ்வுடன் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Categories

Tech |