தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியாக உள்ள “லவ் மாக்டெய்ல்” திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க போவதை நினைத்து பெருமிதத்தில் இருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான “லவ் மாக்டெய்ல்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு திரை உலகில் உள்ள அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் நாகசேகர் படத்தின் உரிமையை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தமன்னா மற்றும் சத்யதேவ் ஆகியோரிடம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை தமன்னா கூறுகையில் தெலுங்கு திரை உலகமே ஆவலோடு எதிர்பார்த்த படத்தில் நடிப்பது மிகவும் பெருமையானது, சத்யதேவ் போன்ற திறமையான வளர்ந்துவரும் நடிகருடன் நடிக்கப்போவது குறித்து ஆவலாக உள்ளது. இந்த படத்தில் நகர்ப்புற வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் மையமாக கொண்ட கதைக்களம் எனக்கு மிகவும் நெருக்கமானது.
நான் பொதுவாக பழைய படங்கள் மற்றும் காதல் கதைகள் போன்ற திரைப்படங்களுக்கு மிகப்பெரும் ரசிகையாவேன் . இந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரத்தில் பல நடிகை, நடிகர்கள் நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தியது தான் என்னை மிகவும் கவர்ந்தது என பகிர்ந்துகொண்டர். இன்னும் பெயரிடாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் மிக விரைவில் தொடங்க உள்ளது.