வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின் வங்கி கணக்கிலிருந்து 79 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகேஷ் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை மோசடி செய்தது ரவிச்சந்திரன், சுமன், குலசேகரன் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.