Categories
சினிமா

நான் வந்து ஒரு பஞ்சு மாதிரி!…. அவர்களின் திறமையை உறிஞ்சிடுவேன்!… நடிகை ராஷ்மிகா ஸ்பீச்….!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா படம் ரசிகர்களை பெரு வாரியாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் ஜோடிசேர்ந்த அவர், தற்போது வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இது தவிர்த்து இந்தி படங்களிலும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் குட்பை என்ற இந்தி படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்து உள்ளார்.

குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை கொண்டாடுவது மற்றும் அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவகூடிய சுய உண்மையை அறிதல் ஆகியவை படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளக்கூடிய வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை இந்த திரைப்படம் வெளிப்படுத்தும். விகாஸ்பால் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா உள்ளிட்டோருடன் பவைல் குலாதி, எல்லி ஆவ்ரம், சுனில் குரோவர், சாஹில் மேத்தா போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்ததில் ஒரு பெரிய உருமாற்றம் பெற்றுள்ளேன் எனக்கூறும் ராஷ்மிகா, நான் ஒரு பஞ்சுபோன்றவள். இதனால் என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சிகொள்வேன் என கூறியுள்ளார். குட்பை திரைப்படத்திற்கு முன்பும், பின்பும் ராஷ்மிகா முற்றிலும் வேறுபட்டவள். அவற்றில் பச்சன் சார் ஒரு பெரும் பங்காற்றியுள்ளார் என அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப்புடனான முதல் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ராஷ்மிகா, முதல்நாளில் பச்சன் சாரை நான் சந்தித்தபோது அவரது தனித்துவ பண்பை கண்டு மிரண்டுபோனேன். அவர் மிக கனிவானவர் ஆவார். படப்பிடிப்பு தருணத்திலேயே ஒரு நடிகராக அவரை பற்றி என்னால் நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.

 

Categories

Tech |