தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 43 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்
இந்நிலையில் இன்று 44வது ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது .அந்த ஆடியோவில், அதிமுக கட்சியை காப்பாற்ற நான் வந்தே தீருவேன் என சசிகலா தெரிவித்துள்ளார் .ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்கள் நீக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற நான் வந்தே தீருவேன் அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது என்று கூறியுள்ளார்.