மாநகரம் கைதி மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்த படத்தை இயக்கியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக இந்த படம் பூர்த்தி செய்து இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும் ஆக்ஷன் காட்சிகளிலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த திரைப்படம் கவர்ந்து வருகின்றது. உலகம் முழுவதும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றது. விக்ரம் திரைப்படம் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜிக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக கமல் வழங்கியுள்ளார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதை தொடர்ந்து அனிருத்திடம் கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் எனக் கேட்டபோது விக்ரம் திரைப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அளித்தார் என பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மாமனிதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம் நிருபர் ஒருவர் விக்ரம் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கமல்ஹாசன் லோகேஷ்க்கு கார், சூர்யாவிற்கு கடிகாரம் கொடுத்திருக்கின்றார். அதேபோல் விக்ரம் படத்தில் நடித்த உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது கிடைத்தது பெரும் பாக்கியம் இதை நான் வாழ்நாளில் கற்பனை கூட பண்ணி பார்த்தது விஷயம் என நெகிழ்ச்சியுடன் பதில் அளித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மாமனிதன் படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.