Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் விவசாயி, விவசாயி” சொன்ன போதாது…. இதை செய்யுங்கள்…. முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்…!!

முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லுவதை விட விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதா சட்டம் எந்தவகையிலும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்காது. இந்த புதிய சட்டம் வேளாண்துறையை அடியோடு அழிந்து போகச்செய்யும் என குற்றம் சாட்டினார்.

மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில்துறை வளர்ச்சி அடையாமல் பின்னடைவை சந்தித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது என்றும், விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |