Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் வீட்டுக்கு வர மாட்டேன்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள மொளசி விட்டம்பாளையம் பகுதியில் நாகராஜ் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு முருகாயி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நாகராஜிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு  முருகாயி கோபித்துகொண்டு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து நாகராஜன் மீண்டும் முருகாயியை தொடர்புகொண்டு வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் முருகாயி வரமறுத்ததால் மனம் உடைந்த நாகராஜ் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகராஜை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நாகராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |