பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக நபர் ஒருவரின் குடியுரிமையை பறிக்க அதிகாரிகள் துரிதமாக செயல்ப்பட்டுவருகின்றனர்.
போஸ்னியா மற்றும் ஸ்விச் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்ற 31 வயதுடைய நபர் ஒருவர் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்திற்காக பாரிஸில் கைது செய்யப்பட்டார். இதனால் இவருக்கு சுமார் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நபரின் ஸ்விஸ் குடியுரிமையை பெற பாரிஸ் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபர் அவருக்கு எதிரான இந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் அவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்படும் பட்சத்தில் ஸ்விஸ் நாட்டிற்கு அவர் திரும்பமுடியாதவாறும் ஐரோப்பாவின் 26 முக்கிய நாடுகளுக்கு அவர் குடியேற முடியாதவாறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவரின் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் அவரது தண்டனை காலத்திற்குரிய சில நாட்களை ஸ்விட்சர்லாந்தில் செலவிடுவதற்காக வேண்டுகோள் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெடரல் நிர்வாகமானது அந்த நபரின் ஸ்விஸ் குடியுரிமையை பெறுவதற்கான நடவடிக்கையில் விரைவாக செயல்படுகிறது. எனினும் அந்த நபர் கடந்த 2014ம் வருடத்தில் பிரான்சில் கைது செய்யப்பட்டபோது இந்த தீவிரவாத திட்டமானது இவ்வளவு பெரிதாக முன்னெடுக்கப்பட தேவையில்லை என்றும் அந்த திட்டத்தை அதன் பின்பு செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.