உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் கட்சித் தொண்டர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள மயிலாப்பூரில் சர்வதேச கழிப்பறை விழா-2022 நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவர் தீர்வுக்காண களம் என்ற தலைப்பில் வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளார். இவர் மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கக்கூஸ் என்ற செயலியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார் அதாவது சேப்பாக்கம் தொகுதியில் என் மனைவி கிருத்திகா மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார். என்னை விட கிருத்திகா தொகுதிக்காக அதிக அளவு உழைக்கிறார். இதனால் நான் அடுத்த தேர்தலில் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும் என நினைக்கிறேன். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் என்னுடைய மனைவி கிருத்திகா கீழே இருந்து என்னை முறைத்துக் கொண்டு இருக்கிறார் எனக் கூறினார். இந்த பதிவை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிண்டலாக கூறினார் என்பது குறிப்பிடதக்கதாகும். இருப்பினும் அடுத்த தேர்தலில் கிருத்திகா உதயநிதி களம் இறங்குகிறார்களா நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.