Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது.

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் புதினும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதால் உக்ரைன் பதற்றத்தை தணிக்க 2 நாட்டு  தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ரஷிய அதிபர் புதின்  கூறியதாவது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. என்னை பொறுத்தவரை நான் ஜி-20 மாநாட்டில் எந்த நாட்டின் தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சு வார்த்தை எதுவும் பேச மாட்டேன். ஆனால் எங்களின் நட்பு நாடுகளின்  தலைவர்களுடன் மட்டும் பேசுவேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |