Categories
பல்சுவை

“நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதுசு போல பாதுகாக்கணுமா”….. எப்படி பராமரிக்கிறது….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதிது போல எப்படி பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்ப்பூச்சு போகாமல் பராமரிக்க வேண்டும். நான் ஸ்டிக் தவா மற்றும் கடாய் போன்ற பாத்திரங்கள் இன்று சமையலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஹோட்டல்களில் சுடுவது போன்று மொரு மொரு தோசை, கடாயில் ஒட்டாமல் இருப்பதற்காக நான் ஸ்டிக் தவா அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நான்-ஸ்டிக் தவாவில் பூசப்படும் பொருள்களால் அந்த பாத்திரங்களை கழுவுவது எளிதாகிறது.

இருப்பினும் நான்ஸ்டிக் பாத்திரங்களை மற்ற பாத்திரங்களை போல் கழுவினால் சீக்கிரம் பாழாகிவிடும். அதன் மேல் பூச்சு போய்விட்டால் நான்-ஸ்டிக் பாத்திரம் நீடித்து உழைக்காது. எனவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக நான் ஸ்டிக் தவா பாத்திரத்திற்கு எண்ணெய்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணெய்கள் பயன்படுத்தாமலேயே நீங்கள் அதில் தோசை சுடும்போது தோசை மிகவும் எளிதாக வரும். அதேபோன்று நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது ஸ்பூன் அல்லது கத்திகளை பயன்படுத்துவது மிகவும் தவறு. கூர்மையான கரண்டி, கத்தி போன்றவற்றை பயன்படுத்தும்போது அதிலுள்ள மேல் பூச்சுகள் நீங்கி விடும்.

இதனால் மரக்கரண்டி சிலிக்கான் கரண்டிகளை பயன்படுத்த வேண்டும்.  நீங்கள் நான் ஸ்டிக் பாத்திரங்களை கழுவுவதற்கு முதலில் சூடான சோப்பு நீரில் சுத்தம் செய்யுங்கள். மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு துடையுங்கள். பிறகு நன்றாக உலர்ந்த பின்பு பயன்படுத்துங்கள். நான்-ஸ்டிக் பாத்திரங்களை சமையலறையில் வைக்கும் பொழுது சரியான இடத்தில் வைக்கவேண்டும். கூர்மையான விளிம்புகள் கொண்ட பாத்திரங்களுக்கு இடையில் வைக்கக்கூடாது. நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து சமைத்து பிறகு நான் ஸ்டிக் தவா சூடாக இருக்கும் போதே தண்ணீரில் போட்டு விடக்கூடாது. பாத்திரம் நன்றாக குளிர்ந்த பிறகு தண்ணீரில் போட வேண்டும். இதன் மூலம் மேற்பூச்சு போகாமல் நான்ஸ்டிக் பாத்திரங்கள் நீண்டகாலம் நீடித்து உழைக்கும்.

Categories

Tech |