Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி”…… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்….!!!!!!

நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி நடைபெற்றதில் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பத்தில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

முன்னதாக சிலம்பம் தனித்திறமை போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள். சிலம்பம் சுற்றி தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்திய மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சூழல் கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |