நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட கலந்து கொள்ள இருக்கின்றார்கள். நாளை மறுநாள் சனிக்கிழமை ஜூனியர்கள் பிரிவில் மகளிருக்கான தடகள போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதற்கு திருச்செங்கோடு எம்எல்ஏ.ஆர்.ஈஸ்வரன், மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, விளையாட்டுத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க இருக்கின்றார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ.சேகர் உள்ளிட்டோர் பரிசு வழங்க இருக்கின்றார்கள்.