நாமக்கல்லில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கும் மாமனாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2009 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் அமராவதி என்ற இளம்பெண்ணை குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்யதனர். அந்த பெண் கடைசியாக அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் கணவர் நல்லசாமி மாமனார் பழனியப்பன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் அந்த பெண்ணின் கணவருக்கும், அவரது தந்தைக்கும் தலா 1000 ரூபாய் அபராதமும் மற்றும் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.