நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,57,048 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கம் தலா 106,494 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.பி. பாஸ்கர் தலா 78,633 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பா.பாஸ்கர் 10,122 வாக்குகள் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஆதாம் பரூக் தலா 5,589 பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கம் தலா 27,861 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை திமுகவினர் பாதுகாப்பாகவும், ஊரடங்கு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் கொண்டாடினர்.