Categories
மாநில செய்திகள்

நாமக்கல் பட்டாசு விபத்து : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டாசு வெடிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் வசித்து வரும் தில்லை குமார் என்பவர் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ளார். இவர் மோகனூர் அருகே இருக்கும் குமரிபாளையத்தில் குடோன் வைத்து இருக்கிறார். இந்நிலையில்தான் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் நோக்கத்தில் அதிக அளவில் நேற்று தனது வீட்டில் பட்டாசுகளை எடுத்து வைத்து இருக்கிறார்.  இந்த நிலையில் தான் இன்று அதிகாலை திடீரென அவர் வைத்துள்ள பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அனைத்து பொருட்களும் எரிந்து 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூறையிலும் தீபரவி சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 3மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்த நிலையில், இந்த விபத்தில் தில்லை குமார் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 8-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |