பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி, ரியோ ,அனிதா, ஆஜித், அர்ச்சனா, ஷிவானி, சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் . நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோ இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா ,ஆஜித், அனிதா மற்றும் சோம் ஆகிய நால்வரில் ஒருவர் வெளியேற போகிறார் என்பது தெரிகிறது . இவர்களில் யார் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று போட்டியாளர்களிடம் கமல் கேட்கிறார் .
இதற்கு பாலாஜி ,சோம் பெயரையும் ஆரி ,ஆஜித் பேரையும் கூறுகின்றனர் . இதையடுத்து கமல் டென்ஷனாக இருந்த ஆஜித்திடம் சீட் நுனியில் உட்கார்ந்து இருக்கிறார் என்று கூறுகிறார் . பின் மக்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்பதை பார்ப்போம் என்று கூறி நாமினேஷன் அட்டையை கமல் கையில் எடுக்கிறார் . மேலும் இதில் ஒருவர் இருக்கிறாரா ? அல்லது இருவரில் இருக்கிறாரா? என்று கூறும் போது இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா ? என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது . சமூக வலைத்தளங்களில் அர்ச்சனா வெளியேறியதாக தகவல்கள் பரவி வருவதையடுத்து வேறு யாரும் வெளியேறி இருக்கிறார்களா? என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும் .
#BiggBossTamil இல் இன்று.. #Day77 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/W1qrYEx9SF
— Vijay Television (@vijaytelevision) December 20, 2020