Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் அடிக்கடி பயன்படுத்தும் மாவு கெடாமல் இருக்க வேண்டுமா…? அப்ப இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!!

அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில்  மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த மாவு விரைவில் கெட்டுப் போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.

மாவை முறையாகப் பதப்படுத்தி வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். ஆனால் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதைக்குறித்து இதில் பார்ப்போம். காற்றுப்புகாத பாத்திரத்தில் வைக்கலாம். இருக்கமாக மூடிக்கொண்டு உலோக பாத்திரங்கலின் மாவை போட்டு வைக்கலாம்.

மூடி இருப்பதால் எளிதில் பூச்சிகள் புகாது. அதிக அளவு மாவை வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பதப்படுத்தி வைக்கலாம்.  சிலர் பாத்திரத்தில் இஞ்சி மஞ்சள் போன்றவற்றை போட்டு வைப்பார்கள். பூச்சிகள் ஊடுருவாமல் இருப்பதற்காக பிரியாணி இலையை நான்கு போட்டு வைத்தாலும் பூச்சி தாங்காது. மாவு இருக்கும் பாத்திரத்தில் செய்வதன்  மூலம் அன்றாடம் மாவை பாதுகாக்க முடியும். இப்படி செய்தால் நீண்ட காலம் வரை பாதுகாக்க முடியும்.

Categories

Tech |