நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு தங்கையாக நடித்து வரும் மூன்று நடிகைகளில் ஒருவர் காயத்ரி. இவர் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை காயத்ரி செம மார்டன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.