விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மாயனின் 3 தங்கைகளில் மூத்த தங்கையாக நடிப்பவர் காயத்ரி. இவர் சரவணன் மீனாட்சி, வாணி ராணி உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் இவர் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் சிவன் போன்று வேடமிட்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட காயத்ரி தற்போது காளி போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CU7dlxqhwTZ/?utm_source=ig_web_copy_link