தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறுவதெல்லாம் தவறான விஷயம். தீண்டாமை விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு என்னுடைய பாராட்டுகள். மேலும் தமிழகத்தில் சமூக நீதி குறித்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் தெரிந்தே பல இடங்களில் சாதிய கொடுமைகள் நடைபெறுகிறது என்று கூறினார்.