Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நாம் சாப்பிடும் காய்கறிகளில் என்ன பயன் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா”…? அப்ப இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

வாழைப்பூ:

இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது.

வாழைத்தண்டு:

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும்.

பாகற்காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியை தூண்டி உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும்.

பீட்ரூட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. மலச்சிக்கலைப் போக்கும்.

வெண்டைக்காய்:

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.

கோவக்காய்:

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. வாய்ப்புண் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.

முருங்கக்காய்:

இரும்புச்சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காயை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்.

சுரக்காய்: புரதம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:

வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

காரட்:

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

Categories

Tech |