இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு துவங்குகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் தொடர்பாக வீரர்கள் மத்தியில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது “வெஸ்ட் இண்டீசில் போட்டிகளை அனுபவித்து விளையாடுவோம்.
இங்கு இருக்கக்கூடிய வானிலை சிறிது வித்தியாசமாகவும் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வீரர்கள் IPL போட்டியில் விளையாடி இருக்கின்றனர். இதில் பல புன்னகை, நிறைய வெற்றிகள் கிடைத்தது. ஆகவே வெஸ்ட் இண்டீசில் நாம் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். நம் திறமையை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்” என கூறினார். இதனிடையில் இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திரஜடேஜா விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. அவருக்கு முழங்காலில் லேசான காயம் இருப்பதாகவும், காயத்தின் தீவிர தன்மை பற்றி மருத்துவ ஆலோசனை பெறப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.