வறுமை, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற வற்றிற்கு தடுப்பூசி இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி உயிர் மட்டுமில்லாமல் பொருளாதாரத்தை பதித்து பல இடங்களில் அதிக வறுமையையும் பசியையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், “நாம் கொரோனாவிடம் சோர்ந்துவிட்டோம். ஆனால் நம்மிடம் கொரோனா சோர்வு அடையவில்லை.
தன்னை விட பலவீனமானவர்களாக பார்த்து அது வேட்டையாடுகிறது. ஆனால் இது வேறு சிலர் பிரிவுகளையும் பாதிப்படையச் செய்கிறது. பசி, காலநிலை மாற்றம், வறுமை, சமத்துவமின்மை போன்றவற்றிற்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை” என கூறியுள்ளார்