பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரையுலக நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்களை குறிவைத்து மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மேலும் “அவரால் மட்டுமே முடியும்… மிக தமிழுணர்வு உள்ளவர்.. மிக விரைவில் உங்களுடன் தமிழ் சொந்தங்களே “என்று சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் பொதுமக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.