தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி சென்னை, ராயப்பேட்டை ஓஎம்சிஏ திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள், ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மேடையில் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரையும் ஆவணமாக வெளியிட உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.