நாம் தமிழர் கட்சியும் பாஜகவின் தமிழக கிளை என விசிக கட்சியின் நிர்வாகி வன்னியரசு விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து தான் இங்கு பேசுறவங்க எல்லாருமே பேசுகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என் ரவி என்பவர் இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு வந்த போதே விடுதலை சிறுத்தைகள் நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். ஏனென்றால் அவர் நாகாலாந்திலே நாகர்களுக்கு என தனி நாடு கேட்டு கொண்டிருப்பதால்.. தனித்த அடையாளத்தோடு, தனிநாடு கேட்டு கொடுக்கின்ற அந்தப் போராளிகளோடு இவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பேச்சுவார்த்தையில் அங்கே ஒரு டாகுமெண்ட் கொடுக்கின்றார், மோடியிடம் ஒரு டாக்குமென்ட் கொடுக்கிறார். ரெண்டு பேருக்கும் தனித்தனி டாக்குமெண்ட் கொடுக்கிறார். ரியல் எஸ்டேட்டில் டபிள் டாக்குமெண்ட் போடுவது போல… ஆர்.என். ரவி ஆளுநராக இருக்கும் போது நாகலாந்துடைய போராளிகளை ஏமாற்றுவதற்கு ஒரு டாகுமெண்ட், இங்கே ஒரு டாக்குமென்ட் போடுகிறார்.
சரி எதற்காக அவர் அப்படி போடுகிறார் ? என்றால் இந்தியா முழுக்க இருக்கின்ற தேசிய இனங்கள் உடைய அடையாளத்தை அச்சுறுத்துவது அல்லது அழித்தொழிப்பது, இதுதான் அவருடைய வேலை.பாரதீய ஜனதா கட்சியுடன் செயல் திட்டம் என்பதும் அது தான்.வடகிழக்கு மாநிலங்களான அசாமாக இருக்கட்டும், நாகலாந்தாக இருக்கட்டும், மற்ற மாநிலங்களாக இருக்கட்டும் அவர்கள் அங்கே தனித்த தேசிய இனங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரின் தேசிய இன விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பவர்களை ஒடுக்குவது, இந்திய ஒன்றியம் முழுக்க இருக்கின்ற தேசிய இனங்களுடைய அடையாளத்தை அழித்து விட்டு, இந்தியாவை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம் என்ற அடிப்படையில் ஒன்றை இந்தியாவாக இந்துராஷ்டிரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கு தடையாக இருப்பது இந்திய இனங்களுடைய விடுதலை, தேசிய எழுச்சி என வன்னியரசு கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழ் தேசிய இனங்களுடைய அடையாளத்தை அழித்தொழிப்பது. எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றதே அந்த தேசிய இனங்களை அழித்தொழிப்பது. அழித்தொழித்து விட்டு இந்துமய படுத்துவது, இந்துராஷ்டிரத்தை படைப்பது. இந்த கோணத்தில் இருந்து இன்றைக்கு விடுதலைசிறுத்தைகள் இந்துத்துவத்தை எதிர்க்கின்றோம், சனாதனத்தை எதிர்க்கின்றோம், வாரணா சிரமத்தை எதிர்க்கின்றோம், பாரதீய கட்சியை எதிர்க்கின்றோம்.
எல்லா மாநிலங்களிலும் இந்துமயப்படுத்துவதற்கு பல கிளைகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் உடைய குழந்தைதான் பாரதீய ஜனதா கட்சி . பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் நிறைய குழந்தைகள் இருக்கு. இந்து முன்னணி, அனுமன் சேனா, இதே போல நாம் தமிழரும் அதனுடைய கிளை அமைப்பு என விமர்சித்தார்.