நாம் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படமான தான் என்பதை நாம் மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி ஆரோக்கியம் தரும் சத்தான உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். அந்தப் பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் நம்மால் பறக்க முடியாது. அப்படி வேறு ஏதாவது கலந்தால் பால் திரிந்து விடும். நமக்குத் தெரிந்தது இது மட்டுமே.
ஆனால் அதையும் தாண்டி ஸ்டார்ச், மாவு பொருட்கள் ஆகியவை பாலில் கலக்கப்படுகின்றன. இவை பாலை திக்காக்குவதற்கு கலக்கப்படுகிறது தவிர இதனால் உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது கமர்ஷியலாக பால் பார்க்கப்பட்டதால் நிறைய பிரச்சனைகள் உண்டாகி உள்ளது. ஒரு மாடு நிறைய பால் கறக்க வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசி போடுவதிலிருந்து இந்த பிரச்சனை தொடங்குகிறது.
இதனையடுத்து பால் கெடாமல் இருக்க காஸ்டிக் சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மலின் போன்ற வேதிப்பொருள்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. பாலில் தண்ணீர் கலந்தால் லாக்டோ மீட்டர் வைத்து வீட்டிலேயே கண்டுபிடித்து விடலாம். பாலை ஒரு கண்ணாடியின் மீது எடுத்துவிட்டால் அது வழிந்து ஓடும். வழிந்தோடும் இடத்தில் தாரை உண்டாகும். அதை வைத்து கண்டறியலாம். இதுவே மாவுப்பொருட்கள் கலந்தால் அது அங்கேயே தேங்கி நிற்கும்.
அதை வைத்து நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும் பாலில் யூரியா கலந்து இருந்தால் ஒரு சிறிய கண்ணாடி டியூபில் எடுத்து கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் அளவுக்கு சோயா மாவை போட்டு கலந்து நன்கு குலுக்கி கொள்ள வேண்டும். இந்த கலவையை சிகப் லிட்மஸ் பேப்பரை எடுத்து அதில் சில துளிகள் விட்டால் அதில் லிட்மஸ் தாள் சிகப்பில் இருந்து நீளமாக மாறினால் அந்தப் பாலில் யூரியா கலந்து இருக்கிறது என்று அர்த்தம்.
அதனைப்போலவே பாலில் சோப்பு கலந்திருந்தால் 5 முதல் 10 மில்லி எடுத்து அதே அளவு தண்ணீரில் கலந்து நன்றாக கொடுக்க வேண்டும். அதன் மேற்பகுதியில் லேசாக நுரை போல படிந்தால் அது நிச்சயம் சோப்பு இருக்கிறது என்று அர்த்தம். அதனால் நீங்கள் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படம் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.