நாயகி சீரியல் நடிகை வித்யாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வித்யா பிரதீப். இந்த சீரியலில் நடிகை வித்யாவிற்கு முன் நடிகை விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்து வந்தார் . இதையடுத்து அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் வித்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகை வித்யா களரி, தடம், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகை வித்யாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை வித்யா தனது பிறந்தநாளை தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.