அமெரிக்காவில் தான் வளர்த்த நாயின் மீது 36 கோடி ரூபாய் பணத்தை எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்து போன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் பிடித்தவர்களின் மீது அன்பு வைத்து இருப்பது வழக்கம்தான். ஆனால் மனிதர்கள் குறிப்பாக செல்லப் பிராணிகளான நாய் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். அந்த அளவு கடந்த அன்பு சொத்து எழுதி வைக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லை சேர்ந்த பில் டோரிஸ் என்பவர் தனது வங்கி கணக்கில் இருந்து 36 கோடி ரூபாய் பணத்தை தான் வளர்த்த நாயின் பெயரில் எழுதி வைத்து இறந்து போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எழுதி வைத்த பணம் அறக்கட்டளை ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும், தற்போதைய கண்காணிப்பாளர் நாயை வளர்ப்பதற்கு அந்த பலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் நண்பர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.