Categories
உலக செய்திகள்

நாயுடன் நடை பயிற்சி கூடாது… மீறினால் நாய் கொல்லப்படும்…!!!

சீனாவில் நாயின் உரிமையாளர் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டால் நாய் கொல்லப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மக்கள் செல்லப்பிராணியாக விரும்பும் நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சீனாவின் யுன்னான் மாகாணம் தடை செய்துள்ளது. அதுமட்டுமன்றி தெருவின் மூன்று முறை நாயுடன் அதன் உரிமையாளர் பிடிபட்டு விட்டால் மூன்றாவது முறைக்கு பின்னர் அந்த நாய் கொல்லப்படும். இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் உரிமையாளருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நாய்கள் தெருவின் செல்பவர்களை கழிப்பதாக புகார்கள் எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. நாயின் உரிமையாளர் நாயுடன் முதல் முறை தெருவில் பிடிபட்டால் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால் அந்த நாட்டு பண மதிப்பில் 7 முதல் 30 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதே ஒன்று நிகழ்ந்தால் உரிமையாளரிடம் இருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |