சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கண்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மர்ம விலங்கு கடந்த மாதம் கடித்து கொன்றது. இதனை எடுத்து வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதியானது.
இந்நிலையில் நேற்று அதே தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை மற்றொரு நோயை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று பார்த்து சிறுத்தையின் கால் தடம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.