நாய் அல்லது பூனை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு என விளம்பரங்களையும் வால்போஸ்டர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். அதாவது ஒரு சிலர் தங்கள் செல்லப்பிராணிகள் மீது அந்த அளவிற்கு பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் டைமண்ட் என பெயரிடப்பட்டிருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்காக அவர் பத்தாயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் 8,12,555 ரூபாயாகும் நாயை கொண்டு வந்து கொடுத்தால் அல்லது கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் பத்தாயிரம் டாலர் வழங்கப்படும் என பாரிஸ் ஹில்டன் கூறியுள்ளார்.
Categories