ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயைக் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு செல்லும் போது அந்த நாய் காரின் பின்னாலேயே ஓடி உள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரை மறித்து நிறுத்தி அவர்கள் நாயை அவிழ்த்து விட்டனர்.
அதன் பிறகு காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ரஜ்னீஷ் கால்வா என்ற அந்த மருத்துவர் போலீசை உடனடியாக தொடர்பு கொண்டார்.தனது வீட்டில் அருகே தெருநாய் வசித்து வந்ததாகவும் அதனை அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் அந்த நகரின் நாய் இல்லத்திற்கான தொண்டு அமைப்பு ஒன்று விலங்குவதை சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.