Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வாலிபர்”… வைரலாகும் வீடியோ காட்சி…. குவிந்து வரும் கண்டனம்….!!!!!!!!

மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவலாக வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் காந்தி மார்க்கெட் என்ற ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அவ்வழியாக  மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் நாயை தலை கீழாக  தூக்கி சென்றுள்ளார். இதனை அங்கு  இருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. நாயை இப்படி தூக்கி செல்வது கொடுமைப்படுத்தும் ஒரு செயலாகும். எனவே அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பதவி வரும் இந்த வீடியோவை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |