உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியபாத் என்ற பகுதியில் வீட்டில் வளர்த்த நாயை சங்கிலியால் தூக்கில் தொங்கவிட்டு கழுத்தை நிறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
https://twitter.com/Nishantjournali/status/1592004912900104193