வேப்பனப்பள்ளி அருகே மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றிக்கொண்டதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் தெரு நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தபோது அப்பகுதியில் இருந்த மலைப்பாம்பு நாயை பிடித்து சுற்றிக் கொண்டது. இதனால் நாய் சத்தம் போட அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபொழுது மலைப்பாம்பு நாயை விழுங்க முயற்சி செய்தது. இதனால் பொதுமக்கள் அங்கு கூடி சத்தம் போட்டார்கள்.
பின் சத்தம் கேட்ட மலைபாம்பு நாயை கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விட்டார்கள். மலைப்பாம்பு நாயை பிடித்து சுற்றி கொண்டதால் நாய் இறந்து போனது. இதனால் பொதுமக்கள் நாயின் உடலை அடக்கம் செய்தார்கள்.