Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட தன் நாய்க்காக… டிடெக்ட்டிவாக மாறிய ஓனர்… கண்டவுடன் துள்ளி குதித்து ஓடி வந்த நாய்…!!

இங்கிலாந்தில் நபர் ஒருவர் தன் நாய்களை கண்டறிய டிடெக்ட்டிவாக மாறி 70 நாய்களை மீட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த டோனி க்ரோனின் என்பவர் ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட ஐந்து நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவை காணாமல் போனது. இதனால் தன் செல்லப்பிராணிகளுக்காக டிடெக்ட்டிவ் ஆக மாறிய க்ரோனின் அவற்றை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி மெட்ரோ இங்கிலாந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க்ரோனின் தன் நாய்கள் உள்ள இடத்தையும், திருடிய கும்பல்  குறித்த தகவல்களை பெற்றுள்ளார்.

அதன் பின்பு வேல்ஸ் என்ற நகரில் இருக்கும் கார்மாடர்ன்க்ஷயர் என்ற பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் சுமார் 70 நாய்களை கண்டுபிடித்துள்ளார். அவை அனைத்தும் சுமார் 40 லட்சம் வரை மதிப்புடையவையாம். மேலும் அங்கு பல வகையான நாய்கள் இருந்துள்ளன. அதற்கு இடையில் தன் செல்ல பிராணிகளில் ஒன்றும் இருந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த வகையான திருட்டுக்களை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. எனவே இந்த கும்பல் தொடர்ந்து இது போன்ற திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்றபோது சில நாய்கள் எங்களைப் பார்த்து ஓடிவந்து பயங்கரமாக குறைத்தன. அந்த நாய்களின் இடையில் மிகவும் பயந்து போய் இருந்த என் செல்ல பிராணியும் என்னை பார்த்து ஓடி வந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் க்ரோனின் தன் நாய்களை தேட முயற்சித்ததால் தான் தற்போது 70 நாய்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 22 நாய்கள் தற்போது அவர்களின் உரிமையாளர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நாய்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |