Categories
கதைகள் பல்சுவை

நாய்குட்டியும் காக்கையும் ! சிறுகதை

ஒர்  ஊரில் ராமு என்பவர்  வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து                      வந்தார்கள்.அங்கு ஒரு காகம் ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருந்தது.இதனால் காகமும் நாய்குட்டியும்நல்ல நண்பர்களாக  இருந்து வந்தனர்.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் மரத்தில் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் என்னானது அமைதியாக  காணப்படுகிறீகள்? என்று கேட்டது. அதற்கு காகம், இந்த மனிதர்கள் மறஎல்லா உயிர்களிடமும்   அன்புடன் இருக்கிறார்கள் . அவைகளை பற்றி பெருமை பேசுகிறார்கள்.ஆனால் எங்களை  வெறுத்து ஓதுக்குகிறார்கள்   எறிந்து துரத்துகிறார்களே ஏன்? நண்பா என்று கேட்டது காகம். இதற்குக் காரணம் நீங்கள்தான்  என்றது நாய்குட்டி .அதற்கு  காகம் ம்ம் என்ன நாங்களா? என்றது.அதற்கு நாய்குட்டி ஆமாம் உங்களிடம் சில தீய குணங்கள் உள்ளன.

Image result for crow and dog cartoon

இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது   எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? என்றது காக்கை.சுறுசுறுப்பு கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்றது காக்கை.உண்மைதான்! நண்பா என்றது நாய்க் குட்டி.   பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? இந்த மனிதர்கள் குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பார்க்கிறார்கள்.

Image result for crow and dog cartoon

கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். உன்மேலும் அன்பு காட்டுகிறார்கள் .ஆனால் எங்களை மட்டும்  துரத்துகிறார்களே ஏன்? நண்பா என்று மீண்டும் கேட்டது காகம். ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய எண்ணங்களால்  தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது  அப்படி என்ன தீங்கு செய்தோம் நாங்கள் என்று கேட்டது காகம்  . திருடுதல், ஏமாற்றுதல்,என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.தன் தவறை உணர்ந்தது காகம்.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து விடும் .

Categories

Tech |