கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்று தோன்றியுள்ளனர். இந்த பள்ளத்தில் நாய் ஒன்று தன்னுடைய 3 குட்டிகளை ஈன்று பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குட்டிகள் முன்பு படம் எடுத்து நின்றுள்ளது. அதன் பின் தாய்நாய் வந்து தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது.
இதனையடுத்து தாய் நாயை குட்டிகளுக்கு அருகே நல்ல பாம்பு விடவில்லை. இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக குரைத்து கொண்டிருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாய் குட்டிகளை நல்ல பாம்பு பாதுகாத்து கொண்டிருப்பதை பிரம்மிப்புடன் பார்த்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நாய் குட்டிகளுக்கு அருகே இருந்த நல்ல பாம்பை பிடித்து பாதுகாப்பாக காட்டில் கொண்டு விட்டுள்ளனர்.