Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு உணவு வைக்காத தம்பி…. ஆத்திரத்தில் அடித்து கொன்ற அண்ணன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹக்கீம் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் உள்ள நிலையில் இவர் நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் அண்ணன் வெளியூரு சென்ற நிலையில் தனது தம்பியிடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வெளியூர் பயணம் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெல்ட் மற்றும் கட்டை ஆகியவற்றை கொண்டு தாக்கியதால் அவருக்கு எலும்புகள் உடைந்தது மட்டுமல்லாமல் உள் காயங்களும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹக்கீம் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |