தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, நாய்க்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அன்புள்ள கில்லி’.சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா ஹீரோவாக நடித்துள்ளார். அதில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர்.
இதுவரை நாயை வைத்து ஏராளமான படங்கள் வந்து உள்ளது . அதே போல் இந்த படம் நாய்க்கு முக்கிய வேடத்தை அளித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை உருவாக்கிள்ளது. அப்படத்தில் சூரி, நாய்க்கு குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறும்போது, “இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், நாய்க்கு சூரியை குரல் கொடுக்க வைக்கலாம் என கூறினார் . இதுபற்றி சூரியிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த குரல் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என கூறியுள்ளார்.