Categories
உலக செய்திகள்

நாய்க்கு பதிலாக… கணவனை கயிற்றால் இழுத்து வந்த பெண்… குழம்பிப் போன காவல்துறையினர்…!!

பெண் ஒருவர் தன் கணவரை நாயை போல் கயிறால் கட்டி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகே நாய்களை அழைத்து செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் ஒரு தம்பதியினர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் ஊரடங்கை மீது எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அந்த பெண் நாயை வெளியில் அழைத்து செல்வதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

எனவே தான் நான் என் நாயை வெளியே அழைத்து வந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் உங்களின் நாய் எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு என் நாய் இதுதான் என்று தன் கணவரை கைக்காட்டியுள்ளார். மேலும் அந்த பெண் தன் கையில் நாய்களின் கழுத்தில் கட்டப்படும் கயிறு ஒன்றை வைத்திருந்துள்ளார். அதனை அவர் தன் கணவரின் கையுடன் இணைத்துள்ளார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளை வைத்து அந்த தம்பதி தங்களை ஏமாற்றுவதை அறிந்துகொண்டனர். அதன்பின்பு அவர்கள் இருவருக்கும் தலா 1,500 டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |