ஹோட்டல் உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகரில் ஹோட்டல் உரிமையாளரான அருள்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல் வாகனம் நடுவழியில் நின்றது. இந்நிலையில் தன்னை கடிக்க வந்த நாயை அருள் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அருளுக்கும், தினேஷ் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த தினேஷ், சுரேஷ்குமார் ஆகிய இருவரும் இணைந்து அருளை பலமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அருளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.