Categories
மாநில செய்திகள்

நாய் கடித்தால் இழப்பீடு தொகை கிடைக்குமா, கிடைக்காதா?….. இதோ சில முக்கிய தகவல்….!!!

தெரு நாய்களால் கடி படுவது, வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவது, உயிரிழப்புகள் உள்ளிட்ட செய்திகளை நாம் அன்றாட கேட்டு வருகிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீடு பெறுவது பற்றி இங்கே நாம் பார்ப்போம். அதாவது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டோர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். காயத்தின் தீவிரம், காயமடைந்த நபரின் வயது, வேலை இழப்பு மற்றும் இயலாமை போன்ற காரணங்கள் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இதனை எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். தெரு நாய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் வெள்ளைத் தாளில் அனைத்து உண்மைகளையும் தெளிவாக எழுதி விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் மருத்துவமனை கட்டணம், ஓபி டிக்கெட், மருந்து கட்டணம், வாகன சேதம் பழுது நீக்குவதற்கான பில் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து கமிட்டி பரிந்துரைத்த இழப்பீடுத் தொகை, புகார்தாரர் வசிக்கு உள்ளூர் சுய நிர்வாக அமைப்பினால் வழங்கப்படும். ஊங்கள் புகார் நியாயமானது என்று நாங்கள் திருப்தி அடைந்தால் புகார் விசாரணைக்கு அழைக்கப்படுவார். நேரடியாக சென்று கமிட்டியின் முன் விஷயத்தையும் விளக்கலாம். மேலும் வழக்கறிஞரின் சேவையை நாட வேண்டிய அவசியமில்லை. அந்த கமிட்டி இழப்பீடு யாருக்கும் வழங்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பும். அவர்களின் தரப்பு கேட்ட பிறகு இழப்பீடு குறித்து முடிவு செய்யப்படும். அரசு ஒப்புதல் அளித்தவுடன் புகாதாரர்களும் பணம் கிடைக்கும்.

Categories

Tech |