மதுரையில் உள்ள ராஜாஜி சிறுவர் பூங்காவிற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மாலை நேரங்களில் குழந்தைகள் வந்து விளையாடுவதும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதும் மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்து செல்வது வழக்கம். பொதுவாக பூங்காக்கள் பொழுதுபோக்கிற்கான இடம் மட்டுமே.
ஆனால் இந்த பூங்காவுக்கு காதலர்கள் போர்வையில் வரும் ஜோடிகள் பொது மக்கள் முகம் சுளிக்கும் விதமாக சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்கள். இதையடுத்து இந்த சில்மிஷ ஜோடிகளை திருத்த “நாய் காதல்” செய்யாதீர்கள் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.