Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்…. நடிகர் வடிவேலு ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து வடிவேலு கூறியதாவது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள். திறந்தவெளி கக்கூஸ் போல மாறிவிட்டது. அசிங்க அசிங்கமா பேசுறாங்க. இதனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறார். என் படத்தைப் பற்றியும் அப்படித்தான் பேசினார்கள். அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். பொதுமக்கள் இப்படிப்பட்ட வதந்தியை நம்ப கூடாது. என்னால முடியல என்று வடிவேலு கூறியுள்ளார். மேலும் நடிகர் வடிவேலுவின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |