Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. வடிவேலுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்…. யாரு பா அது?….!!!

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகிவரும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில், பிக்பாஸில் பிரபலமான ஷிவானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கிறது. இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்ற புகழ், சிவாங்கி ,ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு போன்ற பலர் நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக இருந்தது.

ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அவர் இதில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் நடிகை ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என சினிமா துறையில் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷிவானிக்கு முக்கியமான வேடம் இருக்கும் என்றும்  இந்தப்படத்தில் இவர் வடிவேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவார் என்றும் கூறப்படுகிறது. ஷிவானி மார்ச் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . தற்பொழுது முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விக்ரம், வெற்றி உள்ளிட்டோருடன் படங்களில் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டியவை.

Categories

Tech |